ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை

அண்மையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், தென்காசி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வந்திருந்தார். வந்தவர் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ரஜினிக்காக,  சிறப்பு பூஜைகள் செய்ததாக சொல்லப்படுகிறது.

அவரின் வருகையை படு ரகசியமாக வைத்திருந்தது ஆலய நிர்வாகம். எந்த செய்தியாளர் மேல என்ன கோபமோ தெரியல… செய்தியாளர்கள் எவருக்கும் தகவல்  சொல்லவில்லை.

இந்நிலையில், திடீரென கீழப்பாவூர் பகுதியில் உள்ள நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் செய்தியும் படமும் உலா வந்தது.

நமது ஆலயத்திற்கு இன்று வருகை தந்தார் ஐஸ்வர்யா தனுஷ். ஆனால் இந்தப் படத்தை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்..  என்ற தகவலோடு படம் எல்லா குரூப்க்கும் பரவியது. இதனால் ஆலய நிர்வாகத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

அடிச்சி  கேப்பாக அப்பையும் சொல்லாதீக… என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி!

1 thought on “ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!”

  1. கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு வரும் வி.ஐ.பி.,ஸ் ஜோதிடர்கள் மூளை சலவையாலும்., பயமுறுத்தாலும்., பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளாலும் வருகிறார்கள்., இந்த கோவில் அமைந்துள்ள ஊரில் பொதுமக்கள் 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தெப்பக்குளத்தை அறநிலையத்துறையினர் ஒத்துழைப்போடு கோயில் அர்ச்சகர் பூட்டிப்போட்டுள்ளதாக ஊர்பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஊர்பொதுமக்கள் வந்தால் துளசி பிரசாதம் கூட கொடுப்பதில்லை., விஐபிக்கள் வந்தால் கும்ப வரவேற்பு செய்கின்றனர் அர்ச்சகர்கள். இந்த அதிருப்தியை., எதிர்ப்பை வெளிகாட்டாமல் இருக்க விஐபிகளை வரவழைக்கின்றனர். கோயிலுக்கு ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யாவை மட்டும் அல்ல…. யார் வந்தாலும் இந்த ஊர் மக்கள் மனதில் உள்ள அதிருப்தியை விலக்க முடியாது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.