சத்துடன் சுவை: குட்டீஸுக்கு ஏற்ற ஆகேவா அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
apple carrot banna halwa - 2026

ஆகேவா அல்வா
தேவையான பொருட்கள்
தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் – ஒரு கப்
கேரட் துருவல் – ஒரு கப்
வாழைப்பழத்துண்டுகள் – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
பால் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – கால் கப்
ஏலக்காய்த் தூள் – அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10

செய்முறை
ஆப்பிள், கேரட் மற்றும் வாழைப்பழத்தை சிறிது பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் அரைத்த விழுது, தேங்காய் துருவல் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.

கலவை சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும் இடையிடையே நெய் சேர்த்து கிளறவும்.

முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் போது வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

சுவையான ஆப்பிள் கேரட் வாழைப்பழ அல்வா தயார். சீக்கிரம் செய்து விட வேண்டுமென்று தீயை கூட்டாமல், மிதமான தீயிலேயே செய்யவும்.

பழங்களை அரைக்காமல் பொடியாக நறுக்கி அப்படியே வேக விடலாம். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும் ஒரு வாரம் வைத்து சாப்பிட விரும்பினால், தேங்காயை தவிர்க்கவும்.

புளிப்பில்லாத ஆப்பிளாக இருந்தால் சுவை தூக்கலாக இருக்கும். பழங்களின் இனிப்புக்கு ஏற்றபடி சர்க்கரை அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.