Huawei Nova 9SE - 2026

ஹுவாய் நோவா 9 எஸ்.இ: சிறப்புக்கள்..!

வணிகம் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
Huawei Nova 9SE - 2026

ஹூவாய் நிறுவனம் mid-range மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

புகழ் பெற்ற ஹுவாய் நிறுவனம் ஹுவாய் நோவா 9 எஸ்.இ என்ற mid-range ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த போன் 6.78-inch full-HD+ Huawei Full View TFT LCD, 90Hz ரெஃ பிரெஷ் ரேட், 270 Hz டச் சம்பிளிங்ரேட், 16.7 மில்லியன் கலர் ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளது.

இதற்கு Snapdragon 680 பிராசஸர் Adreno 610 GUP வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமராவைப் பொருத்தவரை 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைலட், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஆகியவை தரப்பட்டுள்ளன. அதோடு 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் தரப்பட்டுள்ளது.

பிற ஹுவாய் ஸ்மார்ட்போன்களை போல கூகுள் செயலிகள் மற்றும் சேவைகளை இந்த போன் சப்போர்ட் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 66 W அதிவேக சார்ஜிங், 4000Ah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 8 ஜிபி ரோம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.