நீங்கள் ஒற்றுமையான தம்பதிகள், மனம் ஒத்த தம்பதிகள் என்றெல்லாம் இருப்பதற்கு ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே சரியாக வெளிப்படுத்தி விடும்.
தம்பதியர் இருவருடைய லக்னமும் அல்லது சந்திரன், அல்லது சூரியன், அல்லது புதன், அல்லது குரு, அல்லது சுக்ரன் இவற்றில் ஒன்று ஒன்றுக்கொன்று திரிகோணமாய் (1,5,9) அமைந்தால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

லக்ன, சந்திரன் சூரியன் புதன் ஒன்றுக்கொன்று 7-7 ஆக அமைவது அதாவது கணவனின் லக்னம், அல்லது சூரியன் , சந்திரன் புதன் இருக்கும் ராசிக்கு 7ம் இடத்தில் மனைவியின் லக்னம், அல்லது சூரியன் சந்திரன் புதன் அமைவது சிறப்பான யோகத்தை கொடுக்கும். மகிழ்ச்சியான மண வாழ்க்கையாக அமையும்
இருவருடைய சந்திரனும் லக்னமும் சூரியனும் ஒரே ராசி பாகையில் அமைந்தால் மனம் ஒத்த தம்பதிகளாய் இருப்பார்கள்.
ஜோதிடக் குறிப்பு: ரவி சாரங்கன்



