108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அபூர்வ பிரதோஷம்
வழிபாடு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்ட நாளில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மிகவும் அபூர்வ பிரதோஷமாகும். அதன்படி திங்கள் கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி இந்த மூன்றும் ஒன்றாக அமைந்த இந்நாளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் சிறந்த வைணவ ஸ்தலங்களுள் ஒன்றாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் இன்று இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பதும், நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு, கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியடைவது,
தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும் என்பது ஐதீகம். சங்கரநாராயணர் ஆலயத்தில் உள்ள சங்கர நாராயணருக்கும், நந்தி சிலைக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நெல்லை மாவட்டத்தின் பகுதிகளில் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்