Peacock Goat - 2026

அவரவர் பலத்தில் நம்பிக்கை..! ஆடும், மயிலும் சண்டை! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Peacock Goat - 2026

சமூக வலைதளங்களில் விலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது..

சில வீடியோக்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். மற்ற வீடியோக்கள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற சமீபத்திய விலங்கு வீடியோ இணையவாசிகளை மகிழ்வித்துள்ளது.

9 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் மயிலும் ஆடும் காட்டில் சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கிளிப்பில், மயிலும் ஆடும் ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ” எப்போதும் உங்கள் பலத்தில் நம்பிக்கை வைத்திருங்கள்.

துன்பங்களை எதிர்த்துப் போராடும் திறனுடன் தான் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்..

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, 16,700 க்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 1,300 க்கும் மேற்பட்ட லைக்குளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு மிகவும் ஆச்சரியமானது என்றும், மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் இது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வீடியோ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.