health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தழும்புகள் மறைய, உதடு சிவப்பாக, ஆஸ்துமா, மேகநோய், குரல் இனிமை..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தழும்புகள் மறைய…

அவரை இலைச்சாற்றை தினமும் காலை முகத்தில் தடவி வர முகத் திலுள்ள எல்லா விதத் தழும்புகளும் மறைந்து முகம் பள பளப்படையும்.

உதடுகள் சிவப்பாக இருக்க…

வாடாத கொத்துமல்லி தழைச்சாற்றை இரவு படுக்கப் போகும்முன் உதட்டில் தடவிவர உதடுகள் சிவக்கும்.

குரல் இனிமையாக…

  • ஆதி மூலக் கொடியின் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடித்து தினசரி காலை, மாலை இரண்டு வேளை சிட்டிகைப் பொடியுடன் தேன் கவந்து குழைத்துச் சாப்பிட்டு வர குரல் இனிமையாகும்.

மேக நோய்கள் சரியாக…

தாமரைக் கிழங்கு 100 கிராம், பறங்கிச் சக்கை 30 கிராம், காசிக் கட்டி 15 கிராம் இவற்றைத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் தூளை வெந்நீரில் குடித்து வர மேக நோய்கள் சரியாகும்.

ஆஸ்துமா இரைப்புக்கு…

கறுப்பு ஊமத்தை இலை அல்லது பூவை வெடியுப்பு கலந்து நீரில் நனைத்து நன்கு வெயிலில் உலர்த்திய பின் இலைகளை சிகரெட் போல் கருட்டி பத்திரம் செய்யவும். இந்த ஊமத்தம் இலை சிகரெட்டை புகைக்க உடனடியாக இரைப்பு இருமல் தணியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.