school 2 - 2026

பிறந்தநாளிலும் சீருடை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

சற்றுமுன் அடடே... அப்படியா? கல்வி தமிழகம்
school 2 - 2026

பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களிலும், மாணவர்கள் சீருடை அணிந்து வர’ பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சில நாட்களாக பள்ளி மாணவர்கள் மீதான புகார் குறித்த வீடியோக்கள், வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்புக் குரலும் வலுவடைந்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து, பெற்றோர் மொபைலுக்கு பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி, ‘காலை பள்ளி துவங்கும் சரியான நேரத்தில் மாணவர்களின் வருகை, தளர்ந்த அரைக்கை சட்டை, கருப்பு நிற பக்கிள் உடைய பெல்ட் பயன்படுத்தல், சீரான தலைமுடி அலங்காரம், கைகளில் ரப்பர் பேண்ட், செயின், பிரேஸ்லெட், காதுகளில் தோடு, லோ ஹிப் பேன்ட் அணிய தடை, பெற்றோர் கையெழுத்துடன் வகுப்பாசிரியர் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்தல், பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களிலும் சீருடை அணிந்து பள்ளிக்கு வருதல், கட்டாயமாக மொபைல், பைக் போன்றவற்றை தவிர்த்தல், அனைத்து பள்ளிகளிலும் சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வருதல்,’ என்பது உள்ளிட்ட விதிமுறைகளை அவசியம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.