fish - 2026

ஆசையாய் மீன் உண்ண சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? உலகம்
fish - 2026

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாவது சமீப காலத்தில் மிகவும் டிரெண்டிங்கான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று.

அதை லைக் செய்வதும், ஷேர் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இப்படிதான் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி பார்ப்பவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த வீடியோவில் உணவு விடுதிக்கு பசியில் வரும் ஒருவர் தான் சாப்பிட தனக்கு பிடித்தமான மீனை ஆர்டர் செய்கிறார். அவருக்கு பரிமாற்றப்பட்ட தட்டில் காய்கறிகள், கண்ணாடி வகை நூடுல்ஸ், மற்றும் 2 மீன்கள் இருந்தன.

சாப்பிட ஆவலுடன் அவர் சாப்பிட பயன்படுத்தும் குச்சியை நீட்டி மீனை எடுத்து சாப்பிட முயலும்போது, மீன் அந்த குச்சியின் நுனியை லாவகமாக பிடித்துக் கொள்கிறது. அது தன் வாயை திறந்து குச்சியை பிடிக்கும் போது அதன் கூர்மையான பற்களை காண முடிகிறது.

சீனாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா? அல்லது ஜப்பான் நாட்டில் எடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஏனெனில் அங்குள்ள உணவகங்களில் மட்டுமே உயிருடன் உள்ள மீன்கள், இறால்கள் உள்ளிட்டவை பரிமாறப்படுகின்றன.

இந்த வைரல் வீடியோவை பார்த்த 1 லட்சம் பேர் அதற்கு லைக் அளித்து அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். அந்த கருத்துகள் சுவாரசியமாக உள்ளன.

அதில் ஒருவர், பசி மீனுக்கா? அல்லது மனிதனுக்கா? என்றும், மற்றொருவர் மீனும், மனிதனும் ஒருவரையருவர் சாப்பிட விரும்புகிறார்களா? என்றும் வேடிக்கையாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.