paruppu thakali kuzhambu - 2026

தனித்துவமான பருப்பு தக்காளிக் குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
paruppu thakali kuzhambu - 2026

பருப்பு தக்காளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – அரை கப்
தக்காளி – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 12
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10 பல்
மிளகாய்த்தூள், மல்லிதூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – சிறு கரண்டி அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, 3 பல் பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். கொதிக்கும் நீரில் தக்காளியின் காம்பு பக்கம் அடியில் இருக்கும்படி இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கி கைகளால் பிசையவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மீதி பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தக்காளிச்சாறு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். சிறிது நேரம் கொதித்ததும் வேகவைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவந்ததும் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.