protein adai - 2026

ஆரோக்கிய சமையல்: புரோட்டீன் அடை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
protein adai - 2026

புரோட்டீன் அடை

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, இட்லி அரிசி – தலா கால் கப்
உளுந்து, கொள்ளு, பாசிப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 – 12 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல், சௌசௌ துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு, கொள்ளு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊறவைத்து மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிசையவும். மாவைத் தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி இருபக்கமும் எண்ணெய்விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

சிறப்பு: சௌசௌ சேர்ப்பதால் அடை மிருதுவாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.