health tips - 2026

அப்பாச்சி தீர்வு: விஷமுறிவு, நரம்புத்தளர்ச்சி, கண்வலி, கண்பார்வை தெளிவு, கபக்கிட்டு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விஷ முறிவுக்கு…

வாழைப் பட்டையை இடித்துச் சாறெடுத்து உள்ளுக்குக் கொடுக்க உடனே வாந்தி வரும். விஷமும் நீங்கி விடும்.

நரம்புத் தளர்ச்சியா?

சிறு வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

கண் வலிக்கு…

கோவை இலையைக் கசக்கி சாறெடுத்து காலை, மாலை ஒரு துளி கண்களில் விட்டு வர கண்வலி மறையும்.

கண்பார்வை தெளிவு பெற…

அகத்திப் பூவை சாறெடுத்து இரண்டு துளி வீதம் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை விட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

கபக்கட்டு நீங்க…

ஏலத்தைப் பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வர கபக்கட்டு நீங்கும். உஷ்ண பேதியும் கட்டுப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.