IMG 20220415 WA0091 - 2026

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்காலம்-விருதுநகரில் மத்திய அமைச்சர் முருகன்

அரசியல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் முன்னேற விளையும் மாவட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இன்றுசெய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
இந்தியாவில் 112 மாவட்டங்களை முன்னேற விளையும் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதில் தமிழகத்தில் 2 மாவட்டங்கள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று என்றார்.

மேலும் முன்னேற விளையும் மாவட்டங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் கல்வி விவசாயம் குடிநீர் மத்திய அரசு வழங்கும் கடன் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது என்றார்.

மேலும் பேசிய மத்திய இணை அமைச்சர் மத்திய அரசு முன்னேற விளையும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை அறிவித்த போது இருந்த நிலையில் தற்போது விருது நகர் மாவட்டம் வளர்த்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் உள்ள 112 முன்னேற விளையும் மாவட்டங் களில் விருதுநகர் மாவட்டம் 3 வது மாவட்டமாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் காட்டன் இறக்குமதிக்கு 11% வரியை குறைத்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர் அதற்கு பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்
இந்த வரி குறைப்பின் மூலம் ஈரோடு கோவை விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பயன் பெறும் என்றார்.

மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவித்து இருப்பது போல் முன்னேற விளையும் மாவட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக பின்தங்கிய வட்டாரமும் கண்டறியப்பட உள்ளது எனவும் அதனை கண்டறிந்து வளர்ச்சித் திட்டம் பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

மேலும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்காலம் என கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கல்வியை பொதுப்பட்டியிலும் மாநில பட்டியிலும் இல்லாமல் ரகசியமாக வைத்து உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை அவர் தான் விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தமிழகம் தான் மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தபட்டு உள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது எனவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு கொண்டு வருகிறது என்றார்

மேலும் எல்லை தாண்டி கிடைக்கும் மீன் வளத்தை இந்திய எல்லைக்குள் அந்த வளத்தை கிடைக்க மத்திய அரசு திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை விடும் புதிய திட்டத்தை தொடங்கி நம்முடைய பகுதியில் மீன்வளத்தை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

மேலும் தமிழகம் தான் மத்திய அரசின் திட்டம் மூலம் அதிகம் பயன் பெற்ற மாநிலம் என்ற முக்கிய இடத்தை பெற்று இருப்பதாகவும் தமிழக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு மத்திய அரசு நீதி ஒதுக்கி உள்ளது எனவும் மேலும் தமிழகத்தின் எந்த திட்டத்திற்கு நிதி கேட்டாலும் அதனை கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

மேலும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு மாதம் 1500 ரூ நிவாரணம் வழங்கி வருவதாகவும் மீனவ சங்கத்திடம் இருந்து மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைக்க கோரிக்கைகள் இருப்பதாகவும் இது குறித்து வல்லுர்களிடம் கருத்தை கேட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

IMG 20220415 WA0091 - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.