காங்கிரஸ் பெற்ற ரூ.175 கோடி கருப்புப் பணம்: வருமான வரித்துறை நோட்டீஸ்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
16 July15 Income - 2026

ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திடமிருந்து 175 கோடி ரூபாய்க்கு கறுப்புப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய தேசிய காங்கிரசுக்கு வருமான வரித் துறையிலிருந்து ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி வருமான வரித் துறையால் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் அலுவலக பொறுப்பாளர்கள், இது குறித்த ஆவணங்களை காண்பிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து கணக்கிடப்படாத நிதி அளிப்பு தொடர்பான சில ஆவணங்களை காங்கிரஸ் சமர்ப்பிக்கத் தவறியதால், திங்களன்று ஷோ காஸ் அறிவிப்பு வழங்கப்பட்டது.

அண்மையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் ஹவாலா பரிவர்த்தனை மூலம் சுமார் 175 கோடி ரூபாயை காங்கிரசுக்கு அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிதி அரசாங்க திட்டங்கள் மூலம் போலி பில்லிங்ஸ் மூலம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், காங்கிரசுக்கு கருப்பு பணம் நன்கொடைகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.