பாமர பக்தர்களுக்கு விலகாத கிரிவலப் பாதை.. வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு விலகுகிறதா?

Published:

sendhamarai1
sendhamarai1

சட்டங்களும், பேரிடர் கால அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் கடைகோடி மனிதர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

இவ்வாறு இருக்கையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “சித்ரா பவுர்ணமி” விஷேச நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் வழக்கமாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் உத்தரவின் பெயரில் நேற்று முன்தினம் முதலே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

sendhamarai
sendhamarai

கிரிவலப்பாதை காவல் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு மக்கள் உள்ளே புக முடியாத அளவிற்கு காவல்துறை கெடுபிடியாக நடந்துகொண்டது.

ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை எந்த கெடுபிடியும் இல்லாமல் சுதந்திரமாக நேற்று சித்ரா பவுர்ணமி’யை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தார்.

தி.மு.க’வின் திருவண்ணாமலை பகுதி குறுநில மன்னர் போல் செயல்படும் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் ராஜமரியாதையுடன் ஸ்டாலின் மகள் செந்தாமரையை கிரிவலம் அழைத்து சென்றார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

ஸ்டாலின் தேர்தலில் ஜெயித்து முதல்வராக 11 மணிக்கு பதவி ஏற்றபின் 11 பத்துக்கு நடக்க இருக்கும் செயல்களாக திமுகவினர் விவரிக்கப்பட்ட செயல்கள் ஒருபுறம் இருக்க அதற்கு முன்பே அவர்களின் அதிகாரம் நடக்க ஆரம்பித்து விட்டதா?

ஆட்சியில் இருப்பவர்.. அவரது சொந்தக்காரர்கள் செய்தாலே இது பொருந்தாது. மக்களுக்கு ஒரு சட்டம் ஆள்பவர்களுக்கு ஒரு சட்டம் என்பது அநீதி. அப்படி இருக்க, வெறும் முதல்வர் கனவில் வாழும் ஒருவரின் மகளுக்கு இந்த சலுகையை அதுவும் இப்போதுதான் வருமானவரி சோதனையில் மாட்டிய ஒருவரது மனைவிக்கு இந்த சலுகையா?

இறைவன் மேல் பக்தியும் பற்றுதலும் உள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிந்து தர்மத்தின் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் இந்து கடவுளின் மீதும் வெறுப்பை உமிழும் ஒருவரின் மகளுக்கு அது கிடைத்துள்ளது.
அதிகாரிகளையும் அதிகாரத்தையும் கையில் எடுப்பவர்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கிரமங்களுக்கு குறைவில்லை. பக்தர்களுக்கு விலகாத பாதை பாதகர்களுக்கு விலகுகிறதா? அதிகாரிகள் இப்பொழுதே சாமரம் வீசத் தொடங்கிவிட்டார்களா?

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

கொரோனோ எனும் கொடிய நோய் மக்களை ஆட்டி படைக்கையில் மக்கள் கூடும் இடங்களில் கூடுவதை தவிர்க்க கிரிவலம் போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்போது சாமானிய மக்கள் செல்ல கூட தடை இருக்கும்போது எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத, அரசால் அனுமதிக்கப்படாத பொறுப்பில் இல்லாத செந்தாமரை தி.மு.க தலைவரின் மகள் என்ற ஒரே காரணத்தினால் எப்படி இவ்வாறு தடையை மீறி கிரிவலம் வரமுடிந்தது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பதிலளிப்பாரா?

Related articles

Recent articles

spot_img