தீராத தாகம்.. வறண்டு வரும் நாக்கு.. இதோ தீர்வு!

Thirst
Thirst

புதினா இலையோடு சிறிதளவு சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும் .இந்த கசாயத்தை மூன்று வேலை குடித்து வந்தால் நாவறட்சி பறந்து போய்விடும்.

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

வெள்ளரிக்காய் வெப்பத்தினால் உடலிலிருந்து வெளியேறக் கூடிய வீணாகக் கூடிய சக்திகளால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைந்து அதிக சோர்வு ஏற்படுகிறது.

இதனை ஈடுகட்டுவதற்கான சக்தியை வெள்ளரிக்காய் உண்பதன் மூலம் பெற முடியும். இழப்பீடு ஆன சக்திகளை மீண்டும் உடலிலுடைய செயல்பாடுகளுக்குத் திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தியும் உண்டு. வெயிலினால் உடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் போன்றவைகள் வீணாவதை வெள்ளரிக்காய் ஈடுசெய்கிறது.

வெள்ளரிக்காயை தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து 96.3%, கார்போஹைட்ரேட் 2.5%, பைபர் 0.4% கால்சியம் 10mg/dl போன்றவை உள்ளன. கேரட் கோடை நேர உணவுகளில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெயில் நேரங்களில் அதிகமாகச் சாப்பிடலாம். காரணம், இந்நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அதிகம் உஷ்ணமாவதால் திடீர் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு ரத்த அழுத்தம் சீரற்று இருக்கும். ஆகையால் கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில் நீர்ச்சத்து 86%, கார்போஹைட்ரேட் 10.7%, பாஸ்பரஸ் 530mg/dl, கால்சியம் 80mg/dl உள்ளது. கேரட், வெள்ளரிக்காய் சேர்த்த உணவு : 2 கேரட் மற்றும் 3 வெள்ளரிக்காய் இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் இரண்டு முறை பருகினால் உடல் உஷ்ணம் குறைந்து, தோள் நோய் ஏற்படுவதும் குறையும். இதனைக் கோடை கால சிறப்பு உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

தர்பூசணி வெப்பத்தினால் வறண்டு போகிற உள் உறுப்புக்களுக்குச் சக்தி கொடுத்துச் சுறுசுறுப்பாக்கிறது. கொழுப்பு சக்தி இல்லாமல் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கக் கூடிய அற்புதமான பழம், தர்பூசணி. கோடை நேரங்களில் இதை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்கிற அளவிற்கு இதில் நீர்ச் சத்து உள்ளது. தர்பூசணி சாதாரணமாக தெரு ஓரக் கடைக்களிலேயே கிடைக்கிறது.

இதில் வைட்டமின் நீ 4.5 dl , வைட்டமின் கி 556.3 மிஹி/லி2 பொட்டாசியம் 176.32 mg/dl உள்ளது. எலுமிச்சை கோடை காலத்தில் வெப்பத்தினால் இழப்பாகும் வைட்டமின் சி சக்தியை, மீண்டும் உடலுக்குத் திருப்பிக் கொடுத்து, உடல் முழுவதும் சோர்ந்து துவண்டுபோகாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உடலின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும், நரம்புகளில் ஏற்படும் கொழுப்புப் படிமங்களைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதற்கு உண்டு.

எலுமிச்சையோடு சர்க்கரை கலந்து குடிக்காமல், உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் தங்கும் நச்சு வியர்வையை வெளியேற்ற உதவும். இதில் நீர்ச்சத்து 85%, வைட்டமின் சி 55mg/dlம் அதிகமாக உள்ளதால் நம் உடலை நீர்த் தன்மையோடு வைத்திருக்க உதவும்.

தர்பூசணிச்சாருடன் எலுமிச்சை சாரைச் சேர்த்து அருந்தினால், கண்கள் பாதிப்பு அடையாமல் உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும். .

மற்ற எல்லா பழங்களையும் விட கோடைக்குச் சிறந்தது சீதாபழம். ஏனென்றால் இதில் குளுக்கோஸ் உள்ளது. இதன் மூலம் அதிகமான சுறுசுறுப்போடும், எனர்ஜியோடும் இருக்க உதவும். சிலருக்கு பழமாகச் சாப்பிட விருப்பமிருக்காது. அவர்கள் பழச்சாறாக அருந்தலாம். இதில் குளுக்கோஸ் அளவு 14.5%, நீர்ச்சத்து 73.2%, சாக்கரோஸ் 1.7%, புரோட்டீன் 0.8% உள்ளது.

தக்காளி சூட்டிற்கு தக்காளி ஜூஸ் சிறந்தது. அதில் சர்க்கரையை கலந்து குடிக்காமல், தேன் கலந்து குடிப்பது நலம். காரணம், சர்க்கரை கலந்து குடிப்பதால் வாயு, தொண்டைப் பிரச்னைகள் வரும். சர்க்கரை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் தேவை. தேன் சுலபமாக உடலில் கலந்து விடும்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

மேலும், வெயில் நேரங்களில் உடல் உறுப்புகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றக் கூடிய சக்தி தக்காளிக்கு உண்டு.

நீர்ச்சத்து 91.1%, புரோட்டீன் 0.9%, ஃபைபர் 0.8%, வைட்டமின் சி 30mg/dl, கார்போஹைட்ரேட் 3.4% உள்ளது. இஞ்சி இஞ்சியும், வெள்ளைப் பூண்டும் ஒரே அளவான சக்திகளை நம் உடலுக்குக் கொடுக்கிறது.

இவைகளுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் இஞ்சியில் நீர்ச்சத்து அதிகம். கோடை காலத்தில் ஏற்படும் மயக்கம், குடலுக்குள் நீர்ச்சத்துக் குறைவதால் ஏற்படும் வாயுக் கோளாறுகள், வாந்தி போன்றவற்றைத் தடுக்கும்.

நீண்ட பயண நேரங்களில் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்துக்கொண்டு போங்கள். பயணத்தால் வரும் உடல் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

நீர்ச்சத்து 81.0%, புரோட்டீன் 2.3% கார்போஹைட்ரேட் 12% அளவும் உள்ளது. இளநீர் சிறுநீரகம், கல்லீரல் இவைகளில் வெயில் காலத்தில் உப்புப் படிவங்கள் உருவாகி, அதுவே கல்லாக மாறும் நிலை உருவாகாமல் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு இளநீர் என்கிற ரீதியில் குடித்து வந்தால், நோயாளிகளாக மருத்துவமனைக்கு வரும் தேவை இருக்காது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவிற்கு, நம் உடலை பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த இளநீருக்கு உண்டு.

இளநீர் மூலம் சிறுநீரகம் சீராக செயல்படுவதோடு, உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதிலும் நீர்ச்சத்து அதிகம். வாழைப்பழம் உணவு முடித்த ஒவ்வொரு வேளையிலும் வாழைப்பழம் உண்பது நலம். இது உடல் சீதோசனத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்

. மேலும் குடல் சீராக செயல்பட்டு, குடலுக்குள் நச்சுத் தன்மைகள் தங்கி வயிறு வலி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் புண் உருவாகாது. ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களுக்கு உத்வேகத் தன்மையாகச் செயல்படும். வாழைப்பழம் உண்பதால் ரத்தத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவிற்கு பாதுகாப்பு ஏற்படுகிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

நீர்சத்து 70.1%, புரோட்டீன் 1.2%, கால்சியம் 85mg/dl, பாஸ்பரஸ் 50mg/dl, கார்போஹைட்ரேட் 7.2%. மாதுளைபழம் வெயிலில் அலைவதால் உடல் வியர்க்கிறது. வியர்வை உடலில் தங்குவதால் தொல்லைகள் அதிகம்.

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு, தோலில் ஏற்படும் அரிப்புகள், வயிற்றில் உள்ள பூச்சிகள் போன்றவையில் இருந்து பாதுகாக்கப்படும். .

வெயில் அதிகமான நேரங்களில் உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்களை மாதுளைபழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

ஜுஸாக குடிப்பதன் மூலம் அதிக தண்ணீர் தாகம் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது. நீர்சத்து 78.0%, பாஸ்பரஸ் 70.mg/dl, ஃபைபர் 5.1%, புரோட்டீன் 1.6%.

வெயில் காலத்தில் அன்றாட உணவுகளில் தக்காளி, பூண்டு, மிளகு அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

சமையல் காய்கறிகளில் விதையுள்ள காய்கறிகள் குளிர்ச்சியைத் தரும்.

தயிர், மோர் தாராளமாக அருந்துங்கள். மோருடன் வேக வைத்த பூண்டு, மிளகுத் தூள், சிறிதளவு இஞ்சிச் சாறு சேர்த்துப் பருகுங்கள். <பழவகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலைக் குளியலுக்கு வெந்நீரைத் தவிர்ப்பது நலம். சோப்புப் போடுவதற்கு முன்பு வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, தயிர், கடலை மாவு அரைத்து உடலில் பூசி குளியுங்கள்.

தக்காளியுடன், இளநீரும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்துக் குடிப்பதும் உஷ்ணத்தைத் தனிக்கும்.

சிறுநீரகம், கல்லீரல் சீராக செயல்படவும் துணை புரிகிறது.

வாழைப்பழத்துடன் சீதாபழத்தையும் சேர்த்து ஜூஸ் வைத்துக் குடித்தால் சோர்வு குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories