கனவின் விளைவு: இப்படி கண்டால்‌.. அரசின் உதவி கிடைக்கும்!

Published:

dream-1
dream-1

பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது.

பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பவளத்தை கனவில் கண்டால் நோயில்லாமல் வாழ்வதை சுட்டிக் காட்டுகிறது.

பனி பெய்வதாக கனவு கண்டால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பாழான வீட்டைக் கனவில் கண்டால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பிணத்தைக் கனவில் கண்டால் பொருட்சேர்க்கை மிகுதியாகும் என்பதைக் குறிக்கிறது.

பிரசவ வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

புத்தகத்தை (வண்ணப் படங்களுடன்) கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் வரும் என்பதைக் குறிக்கும்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

புலியை கனவில் கண்டால் உற்றார் உறவினர்களை சந்திப்போம் என்பதைக் குறிக்கிறது.

புற்றை (பாம்பு புற்று) கனவில் கண்டால் இன்பம் உண்டாகும்.

Related articles

Recent articles

spot_img