ஈரோடு – நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் விரைவில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கொல்லம் -செங்கோட்டை-திருநெல்வேலி, செங்கோட்டை -திருச்செந்தூர் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவுசெய்து உள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரெயிலும், தாம்பரம், திருநெல்வேலி செங்கோட்டை வாரம் மூன்று முறை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரெயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரெயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரோடு – நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் விரைவில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கொல்லம் -செங்கோட்டை-திருநெல்வேலி, செங்கோட்டை -திருச்செந்தூர் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவுசெய்து உள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூர் -திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி -செங்கோட்டை -மங்களூரு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மதுரை கோட்டம் சார்பில் கன்னியாகுமரி புனலூர் இடையே தினசரி இயங்கும் ரயிலை செங்கோட்டை வரை நீடித்தது இயக்கவும் திருவனந்தபுரம் -புனலூர் இடையே இயங்கும் தினசரி ரயிலை செங்கோட்டை வழி திருநெல்வேலி இயக்க கேரள எம்.பி கள் தென்னக இரயில்வே யிடம் வலியுறுத்தி வருகின்றனர்.விரைவில் இந்த ரயில்களை நீட்டித்து இயக்கவும் பெங்களூர் -திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி -செங்கோட்டை -மங்களூரு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.