india kerala vishu 01 - 2026

கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…

விழாக்கள் விசேஷங்கள்

கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்து
மெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விஷு உள்ளிட்ட பாரம்பரிய பண்டிகைகளின் கொண்டாட்டத்தை தடுத்தது. இந்து குடும்பங்கள் விஷு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை பின்பற்றி இந்த ஆண்டு விஷூ பண்டிகையை கொண்டாடினர்.
பாரம்பரியத்தை கடைபிடித்து, இந்து இல்லங்களில் மக்கள் அதிகாலையில் ‘விசுக்கனி’ பார்க்க எழுந்தனர், இது நம்பிக்கை மற்றும் செழிப்பைக் குறிக்கும் பித்தளை பாத்திரங்களில் அடுக்கப்பட்ட அரிசி, பழங்கள், தங்கம் மற்றும் பூக்கள் போன்ற மங்களகரமான பொருட்களைப் பார்க்கும் வழக்கமான பாரம்பரிய சம்பிரதாயம் இன்று கேரளாவில் கிராமத்தில் கூட கொண்டாடப்பட்டது.வீட்டுக்கு வீடு வாசல்களில் கொன்றை மலர் அலங்கரித்தது.விஷு பணீடிகையின் ஒரு பகுதியாக பெரியவர்கள் விஷூ கைநீட்டம் பிரசாதமாக குழந்தைகளுக்கு பணம் நாணயங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

வடக்கு கேரளாவில் உள்ள மலபார் பகுதியில், மக்கள் அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து புத்தாடைகள் அணிந்து விஷூவைக் கொண்டாடினர். இன்றைய தினம் மலபார் பகுதியில் உள்ள பல கோவில்களில் ”விசு விளக்கு” வைத்து வழிபாடு செய்து விஷூ மங்கள விழாக் காலத்தின் தொடக்கத்தைக் குறித்தது. வெள்ளரிக்காய், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற பருவகால விளைபொருட்களால் செய்யப்பட்ட வழக்கமான இன உணவு வகைகளை உள்ளடக்கிய “விஷு சத்யா” என்று அழைக்கப்படும் ஒரு ஆடம்பரமான விருந்து, கேரளாவில் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் விஷு கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருந்தது.

கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், சபரிமலை ஐயப்பன் கோயில் ,குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இன்று காணப்பட்டது.அருகில் உள்ள தமிழகத்தில் தென்காசி குமரி கோவையில் விஷூ விழா இன்று கொண்டாடப்பட்டது

விஷூ பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்வர் பினராய் விஜயன் கவர்னர் ஆரிப்முகம்மதுகான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

india kerala vishu 01 - 2026
vishu c - 2026
kerala sadya - 2026
1650013126815 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.