கொடநாடு கொலை, கொளளை வழக்கு குறித்து நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொடநாடு கொலை, கொளளை வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.
ஐ.ஜி சுதாகர் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
குறிப்பாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், சொத்துக்கள், நகைகள் தொடர்பாக சசிகலாவிடம் பல கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை மாலையில் நிறைவு பெற்றநிலையில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Posts by Dhinasari Reporter:
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!
- சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்! தொடர்பு எண்கள் வெளியீடு!
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!


