electric train6 1 - 2026

சென்னையில் கடைக்குள் புகுந்த ரயில்..

சற்றுமுன் தமிழகம்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. 

இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். நல்வாய்ப்பாக ரெயிலில் யாரும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  பிரேக் பிடிக்காததால் விபத்து  ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்து குறித்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை க்குப்பின் ரயில் விபத்துக்கு காரணம் தெரியும்.அப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

electric train6 1 - 2026
electric train2 1 - 2026
electric train1 1 - 2026
202204241724321881 Electric train loses control in Chennai SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.