இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனோ பாதிப்பினால் பல்வேறு உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நோயாளிகளுக்கு உதவ முன் வந்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நிதா எம். அம்பானி கூறுகையில் கொரோனா இரண்டாவது அலையோடு இந்தியா போராடிவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், எங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் இந்திய மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அதனால் ஜாம்நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அங்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் முதற்கட்டமாக ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் இன்னும் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வேறு இடத்தில் அமைக்கப்படும். இதற்குத் தேவையான மனிதவளம், உபகரணங்கள், பொருள்கள், மருத்துவ உதவி, நிதி உதவி உள்ளிட்ட அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும்.
இந்த வசதிகள் ஜாம்நகர், கம்பாலியா, துவாரகா, போர்பந்தர், சௌராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதுவாக இருக்கும்.
மேலும் எங்கள் ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜனை விநியோகம் செய்துவருகிறது என்று கூறியுள்ளார்.
#RelianceFoundation is setting up 1,000 bedded #CovidCare facilities with oxygen supply in #Jamnagar, #Gujarat. All services will be provided free of cost and the entire cost of setting up and running the facilities will be borne by #Reliance. pic.twitter.com/NSZJT67zDP
— Reliance Foundation (@ril_foundation) April 29, 2021