December 6, 2025, 5:41 PM
29.4 C
Chennai

மருத்துவமனை அருகே வீசப்படும் கழிவுகள்; கொரோனா பரவும் அபாயம்; மக்கள் அச்சம்!

madurai gh corona wastage
madurai gh corona wastage

மதுரை அரசு மருத்துவமனை அருகே சாலையில் வீசப்பட்ட உடைகள், முகக்கவசங்கள்.. கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை சுற்றிலும் பயன் படுத்தப்பட்ட நோய் தடுப்பு உடைகள், முகக் கவசங்கள் குவிந்து கிடக்கின்றன . அவை முறைப்படி அகற்றப்படாமல் உள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர் .

madurai gh corona wastage1
madurai gh corona wastage1

உள் நோயாளிகளாக 1,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் . நோயாளிகளை பார்ப்பதற்காக உறவினர்கள் நாள் தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர் . மேலும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் என 2,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

தற்போது கொரோனா 2 வது அலை தீவிர மடைந்துள்ள நிலையில் , அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . முகக்கவசம் அணியாதோருக்கு ரூ 200 அபராதம் விதிக்கப் படுகிறது .

இந்நிலையில் மருத்துவ மனைக்கு வந்து வந்து செல்வோர் , தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை முறைப் படி குப்பைத் தொட்டியில் போடாமல் , ஆங்காங்கே தரையில் வீசிய படி செல்கின்றனர் . இதனால், மருத்துவமனை முன்புள்ள பனகல் கால்வாய் முழுவதும் முகக்கவசங்கள், கையுறைகள், கவச உடைகள், குப்பையாக குவிந்துள்ளன .

குறிப்பாக பஸ் – ஸ்டாப்பிலிருந்து மருத்துவக்கல்லூரி செல்லும் வரையுள்ள பனகல் சாலையில் முகக்கவசங்கள், கையுறைகள் சிதறிக் கிடக்கின்றன . இதனால் கொரோனா தொற்று தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இது போன்று கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் களை பார்க்க வரும் உறவினர்கள் முகக்கவசங்கள், கையுறைகளை கீழே வீசிச் செல்வோரை கண்காணித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தற்போது, சாலையில் குவிந்துள்ள முகக் கவசங்களை உடனடியாக அகற்ற மருத்துவமனை நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் . இப்பகுதியில் கூடுதல் குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories