விதியை மீறி தேனீர் விடுதியில் தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்த அனுமதித்த கடைக்காரருக்கு வட்டாட்சியர் அபராதம் விதித்தார்.
கொரானா 2-ம் அலையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், உணவகங்களில் அமர்ந்து உணவருந்தவும் டீக்கடையில் நின்றுகொண்டு டீ அருந்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் , விதிகளை மீறி இன்று மதியம் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள கௌரி கிருஷ்ணா பழமுதிர் நிலையத்தில் கூட்டமாக நின்றுகொண்டு டீ அருந்த அனுமதித்திற்காகவட்டாட்சியர் தலைமையில் ஆன சிறப்பு பறக்கும் படை அந்த கடைக்கு ரூபாய் இரண்டாயிரம் அபராதம் விதித்தனர்.