images 43 1 - 2026

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..

சற்றுமுன்

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தேர்வறையில் முகக்கவசம் அணிவதா? வேண்டாமா? என தொடர்ச்சியாக கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது.

மேலும் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டிற்கு தேர்வெழுத தடை, ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வெழுத வாழ்நாள் தடை என அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொதுத்தேர்வு மைய வளாகத்துக்குள் ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்தார்.

images 43 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.