December 8, 2024, 8:08 AM
24.8 C
Chennai

கந்த சஷ்டி: சுப்ரஹ்மண்ய கராவலம்பம் ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்!

murugar 1
murugar 1

ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்

ஹே ஸ்வாமினாத₂ கருணாகர தீ₃னப₃ந்தோ₄,
ஸ்ரீ பார்வதீஶ முக₂பங்கஜ பத்₃மப₃ந்தோ₄
ஸ்ரீ ஶஅதி₃தே₃வக₃ண பூஜித பாத₃பத்₃ம
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 1 ||

தே₃வாதி₃தே₃வ ஸூத தே₃வ க₃ணாதி₄னாத₂
தே₃வேந்த்₃ரவந்த்₃ய ம்ருʼது₃பங்கஜ மஞ்ஜுபாத₃ |
தே₃வர்ஷி நாரத₃முனீந்த்₃ர ஸுகீ₃த கீர்த்தே,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 2 ||

நித்யான்ன தா₃ன நிரதாகி₂ல ரோக₃ஹாரின்,
தஸ்மாத் ப்ரதா₃ன பரிபூரித ப₄க்தகாம
ச்ருத்யாக₃மப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 3 ||

க்ரௌஞ்சாஸுரேந்த்₃ர பரிக₂ண்ட₃ன ஶக்திஶூல,
பாஶாதி₃ ஶஸ்த்ர பரிமண்டி₃த தி₃வ்யபாணே |
ஸ்ரீ குண்ட₃லீஶ த்₄ருʼததுண்ட₃ ஶிகீ₂ந்த்₃ரவாஹ,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 4 ||

தே₃வாதி₃தே₃வ ரத₂மண்ட₃ல மத்₄ய மேத்₃ய,
தே₃வேந்த்₃ர பீட₂ந க₃ரா த்₃ருத சாபஹஸ்த |
சூரம்ʼ நிஹத்ய அஸுரகோடிபி₄ரீட்₃யமான,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 5 ||

ஹாராதி₃ரத்னமணியுக்தகிரீடஹார,
கேயூரகுண்ட₃லலஸத்கவசாபி₄ராம |
ஹே வீர! தாரக ஜயாமரப்₃ருʼந்த₃வந்த்₃ய,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 6 ||

பஞ்சாக்ஷராதி₃மனுமந்த்ரித கா₃ங்க₃தோயை​;
பஞ்சாம்ருʼதை​:; ப்ரமுதி₃தேந்த்₃ரமுகை₂ர்முனீந்த்₃ரை​:; |
பட்டாபி₄ஷிக்த ஹரியுக்த பராஸநாத₂,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 7 ||

ஶ்ரீகார்த்திகேய கருணாம்ருʼத பூர்ண த்₃ருʼஷ்ட்யா,
காமாதி₃ரோக₃கலுஷீ க்ருʼத தி₃ஷ்ட சித்தம் |
ப₄க்த்வா து மாமவகலாத₄ர காந்தி காந்த்யா,
வல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 8 ||

ALSO READ:  அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃ம்ʼ புண்யம்ʼ யே பட₂ந்தி த்₃விஜோத்தமா​: |
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்₃ரஹ்மண்ய ப்ரஸாத₃த​:; |
ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃மித₃ம்ʼ ப்ராதருத்தா₂ய ய​: படே₂த் |
கோடிஜன்மக்ருʼதம்ʼ பாபம்ʼ தத்க்ஷணாதே₃வ நஶ்யதி ||

ஹே ஸ்வாமிநாதா, கருணையின் வடிவே, நலிந்தோரின் நேசனே, தாமரை மலர் போன்ற முகம் கொண்ட பார்வதி தேவியின் மைந்தனே, தங்கள் பாதக்கமலங்களை தேவர்களும், விஷ்ணு தேவியான மகாலக்ஷ்மீயும் வணங்குகின்றனர். வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

தேவாதி தேவரான சிவ பெருமானின் புதல்வனே, தேவர்களில் முதன்மையானவரே, தேவந்திரனால் வணங்கப்படும் மென்மையான தாமரை மலரை ஒத்த பாதகமலங்களை கொண்டவரே, தேவ ரிஷி நாரதர் முதலான ரிஷி முனிவர்களால் புகழப் பெறும் வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

உன் மீது கொண்ட பக்தியினால் அளிக்கப்படும் நித்ய அன்னதானம் அடியவர்களின் அனைத்து நோய்களையும் தீர்க்கும். உன் திருநாமம் அடியவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளித்து அவர்களின் அனைத்து அபிலாஷைகளையும் பூரணமாக நிறைவேற்றும். வேதங்களால் போற்றப்படும் ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் மெய்ப்பொருளே, வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

க்ரௌஞ்ச மலையைத் தகர்த்த பெருமையுடைய சக்தி ஆயுதமான வேலையும், சூலத்தையும், வில், அம்பு போன்ற ஆயுதங்களை தன் புனித கரங்களில் ஏந்தியவரும், காதுகளில் குண்டலங்கள் அணிந்தவரும், வேகமாக பறக்கும் மயிலை வாகனமாக கொண்டவருமான வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

தெய்வங்களில் முதன்மையானவரே, தேவர்களின் ரதங்கள் புடை சூழ மத்தியில் நடு நாயகமாக பவனி வருபவரே, தேவர்களின் தலைவனாம் இந்திரனையும், தேவர்களையும் அனைத்து இடர்களிலிருந்தும் எப்போதும் காப்பவரே, (வில்லில் இருந்து) அம்பினை துரிதமாகவும், வேகமாகவும் செலுத்துவதில் திறமை பெற்றவரே, சூரபத்மனை வதம் செய்து கோடிக்கணக்கான தேவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்ற வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்

வைர, வைடூரியம் போன்ற விலைமதிப்பில்லாத கற்கள் அழகாக பதிக்கப்பட்ட கிரீடம் மற்றும் கழத்தணி மாலை அணிந்தவனே, காதுகளில் குண்டலங்களும், கைகளில் காப்பும், வலிமையான கவசமும் அணிந்தவனே, நீ இருக்கும் இடத்தில் பயமில்லை என்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பவனே, தேவர்களின் நிலை கண்டு இரங்கி தாரகாசுரனை போரில் வென்ற வீர தீர பராக்கிரமா !தேவர்களால் நித்தமும் வணங்கப்படும் வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

ALSO READ:  கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

ரிஷி, முனிவர்களின் வேதகோஷங்களுடன் கூடிய பஞ்சாக்ஷரி மந்திர உச்சாடனம் ஒலிக்க, புனித நதியான கங்கை நீராலும், ஐந்து அமிர்தம் நிரம்பிய கலசங்களாலும் தேவர்களின் தலைவனாக தேவேந்திரனால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

அமிர்தம் எப்படி அழிவில்லா நிலையை வழங்குகிறதோ அது போல் உன் அருள்விழிப்பார்வையிலிருந்து பொழியும் கருணை என்னும் அமிர்தம் பக்தர்களின் அனைத்து வியாதிகளையும் நீக்கி, தீய எண்ணங்கள் ஆக்கிரமித்து இருக்கும் மனதை நல்வழிப்படுத்தி அழியாத்தன்மையை வழங்குகிறது. கலைகளின் பொக்கிஷமாக திகழ்பவரே, ஆயிரம் சூரியப்பிரகாசம் போல் ஜொலிப்பவரே, கார்த்திகேயன் என்னும் திரு நாமத்தை உடைய வள்ளி மணாளா ! தங்கள் காத்தருளும் கரங்களால் எனக்கு அருள்வீர்.

புண்ணியமான சுப்ரமண்ய காராவலம்ப ஸ்தோத்ரத்தை நித்யம் இருமுறை பாராயணம் செய்பவர்கள் அந்த ஸ்வாமினாதனின் அருளால் முக்தி பெறுவது திண்ணம். உதயகாலமாகிய பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ஸ்தோத்ரத்தை சுப்ரமண்யரை மனதில் தியானித்து படிப்பவர்கள் தங்கள் ஜென்ம ஜென்மமாக செய்த பாவங்கள் க்ஷணத்தில் அழியப்பெற்று முக்தியை அடைவர்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week