ஸ்ரீதர அய்யாவாளால் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்
(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிடைக்கும். புத்ரலாபம், ஆரோக்யம், ஸம்பத்து, சௌபாக்யம், வித்யாலாபம், உத்யோக லாபம், வியாபார லாபம் முதலிய ஸகல பாக்யங்களும் உண்டாகும்)
ஸ்ருதிஸதநுதரத்னம் ஸூத்தஸத்வைகரத்னம்
யதிஹித கர ரத்னம் யக்ஞ ஸம்பாவ்யரத்னம்
திதிஸூதரிபுரத்னம் தேவஸேநேஸரத்னம்
ஜிதரதிபதிரத்னம் சிந்தயேத் ஸ்கந்தரத்னம்
(நூற்றுக்கணக்கான வேதங்களால் போற்றப்பட்ட ரத்னம் போல் சிறப்பு வாய்ந்தவரும், சுத்தமான் ஸத்வகுணத்தை ரத்னம் போல் வைத்துக் கொண்டவரும், துறவிகளுக்கு நன்மையைச் செய்கிற ரத்னமும், யக்ஞத்தில் துதிக்கப்படுகின்ற ரத்னமும், அஸூரர்களை அழிக்கும் ரத்னமும், தேவஸேனையின் கணவனாகிற ரத்னமும், மன்மதனை ஜெயித்த அழகுவாய்ந்த ரத்னமுமான ஸ்ரீ ஸ்கந்தனாகிற ரத்தினத்தை த்யானம் செய்ய வேண்டும்.)
ஸூரமுகபதிரத்னம் ஸூக்ஷ்மபோதைகரத்னம்
பரம்ஸூகதரத்னம் பார்வதீஸூநுரத்னம்
ஸரவணபவரத்னம் ஸத்ருஸம்ஹார ரத்னம்
ஸ்மரஹஸூத ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
(தேவ சைன்யங்களுக்கு பதியான ரத்னமும், ஸூக்ஷ்ம ஞான வடிவமான ரத்னமும், சிறந்த சுகத்தை அளிக்கும் ரத்னமும், பார்வதியின் புத்ரனாகிற ரத்னமும், நாணற்காட்டில் உண்டான ரத்னமும் சத்ருக்களை அழிக்கும் ரத்னமும், மன்மதனை விபூதியாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரனின் குழந்தையாகிய ரத்னமுமான ஸ்கந்த ரத்னத்தை த்யானம் செய்ய வேண்டும்.)
நிதிபதிஹித ரத்னம் நிஸ்சிதாத்வைத ரத்னம்
மதுரசரித ரத்னம் மாநிதாங்க்ரி அப்ஜ ரத்னம்
விதுஸதநிப ரத்னம் விஸ்வ ஸந்த்ராண ரத்னம்
புதமுநி குரு ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
(குபேரனுக்கு நன்மையைச் செய்யும் ரத்னமும், நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக விளங்கும் ரத்னமும், மதுரமான சரித்திரத்தை உடைய ரத்னமும், பூஜிக்கப்பட்ட சரணகமலத்தை உடைய ரத்னமும், நூறு சந்திரனுக்கு ஒப்பான காந்தியுள்ள ரத்னமும் உலகத்தை நன்கு பாதுகாக்கின்ற குருவான ரத்தினமுமாகிய ஸ்ரீஸ்கந்த ரத்னத்தை த்யானம் செய்ய வேண்டும்.)
அபயவரத ரத்னம் சாப்த ஸந்தான ரத்னம்
இபமுகயுத ரத்னம் ஈஸ ஸக்த்யைக ரத்னம்
ஸுபகரமுக ரத்னம் ஸூரஸம்ஹார ரத்னம்
உபயகதித ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
(அபயத்தையும் வரங்களையும் அளிக்கும் ரத்னமும், ஸந்தான லாபத்தை அளிக்கும் ரத்னமும், யானை முகத்தோனான ஸ்ரீ கணபதியுடன் கூடிய ரத்னமும் ஸ்ரீபரமேஸ்வரனுடைய சக்தியாகிற ரத்னமும், மங்களத்தை அளிக்கும் கைகள், முகங்கள் இவைகளை உடைய ரத்னமும் சூரபத்மனை ஸம்ஹரித்த ரத்னமும் இம்மையிலும், மறுமையிலும் நன்மையை அளிக்கும் ரத்னமுமான ஸ்ரீஸ்கந்தனாகிற ரத்னத்தை த்யானம் செய்ய வேண்டும்.)
ஸூஜந ஸூலப ரத்னம் ஸ்வர்ண வல்லீஸ ரத்னம்
பஜன ஸூகத ரத்னம் பாநுகோட்யாப ரத்னம்
அஜஸிவ குரு ரத்னம் சாத்புதாகார ரத்னம்
த்விஜகணநுத ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
(ஸாதுக்களுக்கு சுலபமான ரத்னமும், ஸ்வர்ண காந்தியுள்ள வள்ளியின் கணவனாகிற ரத்னமும் தன்னை பூஜிப்பவர்களுக்கு சுகத்தை அளிக்கும் ரத்னமும், கோடி சூரியனுக்கு ஒப்பான காந்தியுள்ள ரத்னமும் பிரம்ம தேவனுக்கும் ஸ்ரீபரமேஸ்வரனுக்கும் குருவான ரத்னமும் ஆச்சரிய ஸ்வரூபமுள்ள ரத்னமும் வேத வித்துகளின் கூட்டங்களால் போற்றப்பட்ட ரத்தினமுமான ஸ்ரீஸ்கந்த ரத்னத்தை த்யானம் செய்ய வேண்டும்.)
ஷண்முகஸ்ய ஸகலார்த்த ஸித்திதம்
பஞ்சரத்னமக ப்ருந்த க்ருந்தனம்
யே படந்தி விபவை: ஸ்புடான்விதா:
ஸ்ரீதராக்ய குருமூர்த்ய நுக்ரஹாத்
(பாவக் கூட்டங்களைப் போக்குகின்றதும் ஸகல அபீஷ்ட சித்திகளை அளிக்கின்றதுமான ஆறுமுகக் கடவுளின் இந்த பஞ்ச ரத்ன ஸ்தோத்திரத்தை எவர்கள் படிக்கின்றனரோ அவர்கள் திருவிசநல்லூரில் ஜ்யோதிர்மயமாய் விளங்குகின்ற ஸ்ரீதர அய்யாவாள் என்ற குருமூர்த்தியின் அநுக்ரஹத்தால் ஸகல ஐச்வர்யத்துடன் கூடியவர்களாக நிச்சயம் விளங்குவார்கள்.)