Parrot - 2026

கிளியோடு சவாரி செய்யும் ஆட்டோக்காரர்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
Parrot - 2026

விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் நண்பனாகிய பச்சை கிளி, செல்லுமிடமெல்லாம் அவரது தோளில் பாசத்துடன் பயணிக்கும் நிகழ்ச்சி பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தேர் திருவிழாவிற்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது தேர் திருவிழா முடிந்ததும் சிறுவன் ஒருவன், பச்சைக்கிளிகள் சிலவற்றை விற்பனை செய்வதை பார்த்து அந்த சிறுவனிடமிருந்து விஜயகுமார், ஒரு பச்சைக்கிளியை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தார்.

அந்த கிளிக்கு தினமும் பால், பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பல உணவுகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவருக்கு தோழனாகவும், பிள்ளைபோலும் மாறியது அந்த பச்சைக்கிளி. எப்பொழுதும் வீட்டை விட்டு ஆட்டோ டிரைவர் கிளம்பும் போது கீச்சு கீச்சு என கத்தியுள்ளது.

இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், ஆட்டோ சவாரிக்கு செல்லும் போதெல்லாம் பச்சைகிளி ஆட்டோ ஓட்டுனர் விஜய்யின் தோளில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளது.

இன்றும் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் தினமும் சவாரி செய்து வரும் கிளி வெளியே எங்கேயும் பறந்து செல்லவதில்லை ஆட்டோ ஓட்டுனரின் நண்பாகவும், குடும்பத்தில் ஒருவனாக கிளி விஜய்யுடன் இருந்து வருகிறது.

மேலும் ஆட்டோ ஓட்டுனரின் குரலை கேட்டதும் கீ… கீ… என்று பாசமாக பதில் பேசும் கிளி இரவிலும் ஆட்டோ ஓட்டுனர் உடன் உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விஜய்யின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் கிளி பழகுவதை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் பல பயணிகள் கிளி ஆட்டோக்காரர், கிளி ஆட்டக்காரர் என கூறுகிறார்கள் இப்படிக் கூறுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஏற்படுத்துகிறது என கூறுகிறார் விஜய். மற்ற ஆட்டோ டிரைவர்களும் இதனை ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.