health tips - 2026

அப்பாச்சி தீர்வு: குழந்தைகள் வைத்தியம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

குழந்தைகள் வாந்தி

வசம்பையும், மயிலிறகின் வெண்ணிற பாகத்தையும் சுட்டுக்கருக்கி அதன் பின் அதை இடித்துத் தூளாக்க வேண்டும். பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து சிறிதளவு தேனில் குழப்பி குழந்தைக்கு கொடுத்தால் அதன் வாந்தி நின்றுவிடும்.

கக்குவான் இருமல்

தேவையான அளவு பெருங்காயத்தை எடுத்து நெய்யில் பொரித்துக் கொண்டு அதில் ஒரு மிளகு அளவும், படிகாரத்தில் மிளகு அளவும் எடுத்து தூளாக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் தேனைக் கலந்து ஒரு நாளைக்கு மூன்றுவேளை அருந்திவர கக்குவான் இருமல் குணமாகிவிடும்.

மிளகையும், மயிலிறகையும் சம அளவு எடை எடுத்துக்கொண்டு நெருப்புத் தணலில்போட்டு கருகும்படி வறுத்து தூளாக்கிக்கொள்ளவேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து கக்குவான் இருமலினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தினமும் இருமுறை கொடுத்துவர குணம் ஏற்பட்டுவிடும்.

குழந்தைகள் அஜீரணம், வயிற்றுப்பொருமல்

திப்பிலி, கருஞ்சீரகம், சுக்கு, ஓமம், சீரகம், மிளகு இவைகளை சட்டியிலிட்டு வறுத்துஅம்மியில் வைத்து தூள் செய்து சலித்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து, அரை ரூபாய் எடை அளவுக்கு பெருங்காயத்தை எடுத்து நெய்யில் வறுத்து எடுத்தபின் அதனுடன் அரை ரூபாய் எடைட அளவு இந்துப்பை சேர்த்து தூள் செய்து சலிக்கவேண்டும். பின்பு முதலில் சலித்த பொடியையும், இரண்டாவது சலித்த பொடியையும் ஒன்றாகக்கலந்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதில் இரண்டு சிட்டிகை அளவு தூள் எடுத்து தேனில் குழப்பி குழந்தைகளுக்கு காலை, மாவை இருவேளை சங்கில் வைத்துப் புகட்டினால் குழந்தைகளின் அஜீரண பேதி, அஜீரணம், வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்கள் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.