ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்
கோவை  தொப்பம்பட்டி மத்திய  ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழகம் கேரளா கர்நாடகா விலா தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியின் ஐஜி வர்மா உத்தரவின் பேரில், கமாண்டோ ராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், ஆகியோர் தலைமையில், 80 மீட்பு படை வீரர்களுக்கு ஆழியார் அணையில் பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கப்பட்டது.

Tamil News 5 22 2022 99409122 - 2026

பயிற்சியின்போது, பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், பயிற்சி மற்றும் வீரர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் மீட்புப் படை ஆய்வாளர் சுனில் மற்றும் பிரபு ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரி பயிற்சி அளித்தனர்.

Related articles

Recent articles

spot_img