நடிகர்களுக்கோ எதுவும் தெரியாது! பிறகு ஏன் ஆட்சிக்கு ஆசைப்பட வேண்டும்?

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சினிமா சென்னை

சென்னை:
பிரபல நடிகர்களுக்கோ எல்லாம் தெரியும் என்று சொல்வதற்கில்லை, அப்படி என்றால் அவர்கள் ஆட்சி செய்ய மட்டும் ஏன் ஆசைப் படுகிறார்கள்? இந்தக் கேள்வி எழுப்பப் பட்டிருப்பது, நடிகர் சத்யராஜ் பேசிய பேச்சினால்தான்!

திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாட்டில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என கூறினார். புரிதலோடு கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம்.

பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது. அப்படி நம்பினால் அது தவறு என்று பேசினார். இப்போதுதான் சத்யராஜ் குறிப்பிட்ட பிரபல நடிகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் களத்தில் குதிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களை கிண்டல் அடிப்பது போல், அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நம்பக் கூடாது என்றும், அப்படி நம்பினால் அது முட்டாள்தனம் என்ற ரீதியிலும் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.