snake 5 - 2026

கர்பிணி பாம்பை அடித்துக் கொன்ற மக்கள்! இறந்த பாம்பின் வயிற்றில் 50 குட்டிகள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
snake 5 - 2026

இந்தியாவில் கொடிய விஷப்பாம்பு கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் அது 50 குட்டிகள் போட்டுள்ளது.
அந்த 50 குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். விவசாயி. இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா்.

அப்பொழுது விவசாய நிலைத்தில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருப்பதை கண்டார். இதையடுத்து அருகே உள்ள மக்களை அங்கு அழைத்தார்.

அவர்கள் குச்சியால் அசைவற்று கிடந்த பாம்பை மெதுவாக நகர்த்த தொடங்கிய நிலையில் பாம்பு சீற தொடங்கியது. இதையடுத்து அனைவரும் சேர்ந்து குச்சியாலும், கல்லாலும் பாம்பை வயிற்று பகுதியில் பலமாக அடித்தனர்.

அப்போது வயிறு வெடித்து பாம்பு குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன. மொத்தமாக 50 குட்டிகள் வந்தது. இதற்கு முன்னரே தாய் பாம்பு உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அங்கு வந்த வனத்துறையினர், 50 பாம்பு குட்டிகளையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.