images 2022 08 21T111942.427 - 2026

விவசாயிகள் ஊக்கத்தொகை பெற ஆதார் ஆவணங்களை 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுகோள்..

சற்றுமுன்
images 2022 08 21T111942.427 - 2026

பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற ஆதார் ஆவணங்களை 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் ‘இ-கே.ஒய்.சி.,’ முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.