image 1 - 2026

ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவு..

சற்றுமுன்

வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், என் நாட்டை இழக்க மாட்டேன்” – என ராகுல் காந்தி ஸ்ரீபெரும் புதூரில் தன் தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

குமரியில் துவங்கி நடைபெற உள்ள பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளதாவது,

எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டை இழக்க மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்” என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

image 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.