images 27 - 2026

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு..

வணிகம்
images 27 - 2026

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,701-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது.

அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது. இதனால் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். குறிப்பாக கடந்த  சனிக்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,725-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது.

அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கும், கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,701-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.61,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரு நாட்களை விட இன்று மக்கள் அதீத மகிழ்ச்சியுடன் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.