கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறும் தெலுங்கு தேசம்

இந்தியா சற்றுமுன்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற தெலுங்கு தேச கட்சி, தற்போது கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பல வருடங்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காததால், ஆந்திராவின் நலனை கருதி கூட்டணியில் வெளியேறுவதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு தெலுங்குதேச கட்சி அமைச்சர்கள் இன்று ராஜினாமா செய்யவுள்ளனர். அதேபோல் ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பாஜக அமைச்சர்களும் இன்று பதிலுக்கு ராஜினாமா செய்யவுள்ளனர்.

அகில இந்திய அளவில் அமையவிருக்கும் மூன்றாவது அணியில் தெலுங்கு தேசம் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.