chozhavanthan theppotsav - 2026

திருவேடகம் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
chozhavanthan theppotsav - 2026

சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது விழாவையொட்டி காலை சுவாமி மற்றும் அம்பாள் திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டது தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது

மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தொடர்ந்து மாலை விசேஷ அலங்காரத்தில் தீபாராதனை செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மின் அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தனர். இதில் திருவேடகம் சோழவந்தான் மேலக்கால் தேனூர் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை அறங்காவலர் சேவகன் செட்டியார் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.


மதுரையில் மீனாட்சி அம்மன் அவதரித்த ஜன்ம நட்சத்திரமான தை மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள:

மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு மஞ்சள் குங்குமம் மற்றும் இனிப்புகளை கோவிலுக்கு வந்த பெண்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினமான இன்று அன்னை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் செய்து அழகு பார்த்த ஊர் இந்த மதுரை. இந்த ஊரில் மீனாட்சி அம்மனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ சிறப்பு வழிபாடு நடத்தினோம். கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு திருமாங்கல கயிறு புத்தாடை இனிப்பு வழங்கி நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்தோம் என்றார்.


குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து நடைபெற்றது

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் முன்னதாக கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி பணியாளர்கள் நாகராஜ் மணி ஜனார்த்தனன் மற்றும் ஊராட்சி செயலாளர் மனோபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.