வரி போரில் டிரம்ப்பை வழிக்குக் கொண்டு வந்த இந்தியா! 18% என இறங்கியது எப்படி?

Modi and Trump
#image_title

50% என இருந்த அமெரிக்க வரிவிதிப்பு, இந்திய பொருள்களுக்கு இனி 18% என குறைக்கப்பட்டு, வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக நேற்று இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல் தனது சமூகத் தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடி இருவரும், நேற்று இரவு தொலைபேசியில் பேசி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக தகவல் வெளியானது.  இதனால் இந்தியத் தரப்பிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஒரு முறை பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்,பாரதத்தின் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பலவீனபடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாது என்று உறுதியுடன் தெரிவித்தார். ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி, அதனால் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், ஏற்கெனவே இருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% சதவீதம் அபராத வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரிவிதிப்பு 50% என உயர்ந்தது.  

இது இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எனினும், அவர்களின் வர்த்தகத்துக்கு மாற்று வழி தேடுவதாக அரசு அறிவித்தது. அதே நேரம், அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வந்தன.  குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தனர். எனினும் பாரத அரசு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தங்களது நிலையை உறுதிப்படுத்தி மெதுவாகவே இழுத்துச் சென்றது. எனவே இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்ற  எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டது. 

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

திடீரென அமெரிக்க நீதிமன்றத்தில் ட்ரம்பின் வரி விதிப்பு சட்ட  பூர்வமானது அல்ல என்று தீர்ப்பெல்லாம் வெளிவந்தது. இது ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது. எனினும் பாரத அரசு நிதானமான போக்கையே கையாண்டது. 

இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாரத அரசு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது. இது ட்ரம்பை பெரிதும் சஞ்சல படுத்தியது.  இந்த ஒப்பந்தம் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.  சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகளால் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய இந்தியா,  தற்போது ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் பெரிதும் சாய்ந்து வருவதாக அமெரிக்காவில் அரசியல் நோக்கர்கள் டிரம்பை எச்சரித்தனர் .

இந்த நிலையில் தான், தான் விதித்த வரிவிதிப்பைக் குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவும் தொடர்ந்து  பேச்சு நடத்தப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.  நேற்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். பிரதமர் மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்த அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அதில், இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு 25%லிருந்து 18%ஆக குறைக்கப்படுவதாகவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார் இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரி விதிப்பு, 50%த்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இதை அடுத்து,அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 140 கோடி மக்கள் சார்பில் நன்றி என்று பிரதமர் மோடி அந்தப் பதிவில் தெரிவித்தார். 

இந்நிலையில் வழக்கம் போல தான் வெற்றி பெற்றது போல காட்டி கொண்டு டிரம்ப் சோஷியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், பாரத நாட்டுக்கு கொஞ்சமாக வரியைக் குறைத்தேன் 25%ல் இருந்து 18 % ஆகக் குறைத்தேன். மோடி பயந்துகொண்டு நமது நாட்டுப் பொருள்களுக்கு 0% வரி என்று ஒப்புக்கொண்டார் என்றவாறு எழுதி இருக்கிறார்.  மேலும் அமெரிக்கா விற்கும் பொருள்கள் எல்லாவற்றையும் அப்படியே அதிகப்படியாக வாங்கிக் கொள்வேன் என்று மோடி சொல்லிவிட்டார் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் மோடி, வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக, வெறுமனே நன்றி என குறிப்பிட்டார்.  

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.  

இந்த வரிக் குறைப்பால், தொழில் துறைக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  மற்றும் தேசிய பங்குச் சந்தை நிப்டி இன்டெக்ஸ், சராசரியாக இன்று 2.5% ஏற்றம் கண்டன.  அதுபோல், அண்மைக் காலமாக சரிந்து கொண்டே வந்த இந்திய ரூபாய் மதிப்பு, வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சதவீதம் அதிகரித்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.21 என்ற அளவில் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories