sbi - 2026

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! SBI!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா வணிகம்
sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது.

அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே.

இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி IMPS பரிவர்த்தனை வரம்பு 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி வாயிலாக மேற்கொள்ளப்படும் IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றாலும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் புதிய விதிமுறைப்படி, ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.