சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு வதந்திகள் அவர் உடல் நிலை குறித்து உலா வரும் நிலையில், அண்ணா சமாதி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படுவதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அண்ணா சமாதி அருகே ஜேசிபி எனப்படும் போக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் வேலை வேகமாக நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை சமாதி அருகே, ஒரு பொக்லைன் எந்திரம், இரண்டு மாநகராட்சி லாரிகளும் சுத்தம் செய்யும் பனியில் ஈடுபட்டு வருவதால் திமுக தொண்டர்களுக்கிடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
ஏற்கெனவே, இன்று காலை முதல் சென்னை ராஜாஜி அரங்கம் சுத்தம் செய்யப்படும் பணிகளும், விளக்குகள் பொருத்தப்படும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு, மத்தியிலிருந்து முக்கிய தலைவர்கள் வருவதால், சென்னையிலுள்ள முக்கிய சாலைகளில் பாதுகாப்பிற்கு வரும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அதுமட்டுமின்றி, திமுக தலைவரை பார்ப்பதற்காக பிரதமர் மோடி எந்த நேரமும் வரலாம் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. இது ஒரு புறமிருக்க, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதி அருகே ஒரு பொக்லைன் எந்திரமும், சில மாநகராட்சி வாகனங்களும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், திமுக தொண்டர்களிடையே குழப்பமும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், திமுக., தொண்டர்களிடையே சமாதானப் படுத்தும் விதத்தில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத வரையில், கலைஞர் நலமாக உள்ளார் என்பது பொருள் என்றும், நாளை விடுமுறை என்பதால் , கடற்கரையை சுத்தம் செய்ய Back Hoe Loader எனப்படும் JCB வரவழைக்கப்பட்டிருக்கும். எனவே, கண்ட செய்திகளை பார்த்து குழம்பிட வேண்டாம் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.




