சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், அவற்றை வதந்திகள் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் திமுக., தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.
இதனை வெளிப்படுத்திய
துரை முருகன், செய்தியாளர்களிடம் பேசியபோது,
நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேனே… அதிலிருந்து தெரியவேண்டாமா? நேற்றை விட இன்று அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. நல்ல சமிக்ஞை செய்கிறார். நல்ல சேதி வரும். நலமுடன் உள்ளார். ஊடகத்தினர் அனைவரும் கலைந்து செல்லவும்… என்றார்.
இவ்வாறு, கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டுக்கு வெளியே துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததுடன், அனைவரும் கலைந்து போகவும் வலியுறுத்தினார்.
இதனிடையே, கருணாநிதி அவர்கள் நேற்றைவிட இன்று நலமுடன் உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.





அவர௠சொநà¯à®¤à®™à¯à®•ள௠எலà¯à®²à®¾à®®à¯ à®…à®´à¯à®¤à¯à®•à¯à®•ொணà¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯à®•ளே?
அதான௠சநà¯à®¤à¯‡à®•ம௠ஆகிவிடà¯à®Ÿà®¤à¯.