December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

பாகிஸ்தானில் மத அமைப்புகள் தோற்றுவிட்டனவா? உண்மை நிலை என்ன?

imrankhan - 2025
Opening partnership. Cartoon Courtesy: The Times, London

பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர்  மீடியாக்கள் ஊளையிடுகின்றதே என்ன உண்மை?

பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.

பாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.

பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.

பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.

நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்த மத சட்ட அடிப்படையிலே நேர்மையாக இல்லை என.

இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான். அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.

போட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.

பெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்

மத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.

முஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்திலே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.

தேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.

சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.

மூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.

இப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.

கவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.

விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.

இதைவிட என்ன ஒரு தீவிரவாத அமைப்பும் கட்சியும் வேண்டும்? அதான் எல்லா கட்சிகளும் இந்த மத சட்டத்தையும் இந்த விதிகளையும் ஒப்புக்கொள்கிறதே?

எல்லா கட்சிகளும் இந்தியாவிலே இருப்பது போல சமத்துவம் சகோரத்துவம் என இருந்து மாற்றாக தீவிரவாத கட்சிகள் நின்று தோற்றால் சரி மக்கள் தீவிரவாதத்தை தோற்கடித்தார்கள் என சொல்லலாம்.

ஆனால் எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்?

ஏன் நம்மூர் மானங்கெட்ட மீடியாக்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு குரைக்கிறதுகள்?

இதிலே பாக்கிஸ்தானை குற்றம் சொல்லவில்லை. இப்படி இருக்கவே தனிநாடு கேட்டு பிச்சுக்கொண்டு போனதுகள். அது அவர்கள் பிரச்சினை.

ஆனால் இந்த நாட்டோட நட்புறவாக இருக்கவேண்டும் சகோரத்துவமாக இருக்கவேண்டும் என சொன்னால் தான் சண்டாளம் பிறக்கிறது.

இங்கேயும் இதே போல் தனி மதசட்டம் வேண்டும் என கேட்டால் அதான் அந்த பிரச்சினைக்கு 1947 இல் தீர்வு சொல்லியாச்சே வேண்டுமானால் பாக்கிஸ்தானிலே போய் மத சட்டத்தை முழுமையாக பின்பற்றலாமே என சொல்வேன்.

இந்தியாவிலேயும் இப்படி கொண்டு வரவிருப்பமா என கேட்டால் இல்லை.

மதச்சார்பின்மையே வழி. ஆனால் அது இந்துக்கள் மட்டும் மதசார்பின்மையை பின்பற்றுவதாக இருப்பது தான் பிரச்சினை.

ஒன்று முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.

– சுப்புராஜ் நாயுடு Subbaraj naidu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories