chozhavanthan temple sani peyarchi - 2026

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

சற்றுமுன் ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
chozhavanthan temple sani peyarchi - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் மார்ச். 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.


தொடர்ந்து சனி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


சனி பகவான், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.20…மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4..ம் பாதத்தில் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.


அதையொட்டி, மதுரை அருகே சோழவந்தான் சனீஸ்வரன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


அதோ போல, மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரளயநாத விசாக நட்சத்திர ஸ்தலத்தில், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5…மணிக்கு, இக் கோயிலில் வன்னி மரத்தடியில் அமைந்துள்ள சனீஸ்வர லிங்கம், சனி பகவான் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


இக் கோயிலில் ஸ்தல மூர்த்தி சனீஸ்வரன் ஆகும். சுவாமி, ராகுவுக்கு அதிபதி. நட்சத்திரம் விசாகம், குருவுக்கு அதிபதி ஆகும்.


இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப்
பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


இதேபோல, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் , சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 8…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம், அபிஷேகம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ராசி நேயர்களுக்கு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.