virat kholi - 2026

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

விளையாட்டு சற்றுமுன்
virat kholi - 2026

முதல் ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 41.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக விராட் கோலி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தார்.

சச்சின் சாதனையை முறியடித்த விராட்.

உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.

15,000 ரன்களை 377 ODI ஆட்டங்களில் கடந்த சச்சினின் சாதனையை முறியடித்து, குறைந்த ஆட்டங்களில் (303) 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் விராட்.