
தமிழகத்தில் பிரபலமான ஆயுத பூஜை, விடுமுறை நாட்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் உள்ளது. அடுத்து தீபாவளி என பண்டிகை வருகிறது.
பண்டிகை விடுமுறை அடுத்தடுத்து வரும் நிலையில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு தென் தமிழகத்தில் பயணிகள் பயன்பெறும் அளவில் இல்லை. விரைவில் சிறப்பு ரயில் இயக்கங்களை தென்னக ரயில்வே வெளியிட வெளியூரில் வசித்து உள்ளூருக்கு பண்டிகை கொண்டாட வரும் பயணிகள் அரசு துறை தனியார் துறை பணியாளர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்
கடந்த ஆண்டு தசரா தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மதுரை செங்கோட்டை, திருநெல்வேலி, துாத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கான அறிவிப்புகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிடப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி பயண திட்டத்தை வகுக்க முடிந்தது.
இந்தாண்டு ஆயுத பூஜை, தசராவுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மைசூரு – ராமேஸ்வரம் வழித்தடத்தை தவிர்த்து, மற்ற முக்கிய வழித்தடங்களுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில், மேற்கொண்டு முன்பதிவு செய்ய முடியாத வகை நிலை காட்டுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். சமீப காலமாக சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே கடைசி நேரத்தில் அறிவிக்கிறது. இது பயணிகளுக்கு சரியாக சென்று சேராமல் காலிப் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரிக்கு சிறப்பு தாம்பரத்திலிருந்து தென்காசிக்கு சிறப்புரைகள் இயக்கவும் மேலும் கடந்தாண்டு இயக்கப்பட்ட நல்ல வரவேற்பு கிடைத்த சிமோகா பெங்களூரு திருநெல்வேலி சிறப்பு ரயில்களை வாராந்திர ரயில்களாக இயக்கவும் தற்போது திருவனந்தபுரம் தாம்பரம் இடையே இயங்கி வரும் சிறப்பு ரயிலை வாரம் மும்முறை மும்முறை ரயிலாக இயக்கவும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை விருதுநகர் வழியாக கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் இதனால் கோவை சென்னை முக்கிய இடங்களில் வசிக்கும் தென் மாவட்ட பயணிகள் சொந்த ஊருக்கு விழா காலங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்
இந்த வழித்தடத்தில் இயங்கும் வழக்கமான ரயில்கள் அனைத்தும் 90நாள் முன்பே முன்பதிவு செய்யும் அடிப்படையில் தற்போது நிரம்பி வழிகின்றன. இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். சரியான நேரத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்தால் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட முடியும். கடைசி நேரத்தில் அறிவிப்பதால் பலன் இல்லை. தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும். பொது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களான காரைக்குடி மைசூர் சரளப்பள்ளி செங்கோட்டை சென்னை தாம்பரம் திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்புரைகள் பயனிலிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த ரயில்கள் மேலும் புதிய சிறப்பு ரயில் இயக்க பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

