சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் நடை, ஸ்ரீ சித்திரை ஆட்டத் திருநாள் விசேஷ பூஜைக்காக இன்று (நவம்பர் 6, 2026) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பம்பை புனித நதியில் பக்தர்கள் நீராடி சபரிமலைக்கு புறப்பட்டனர்.
அடுத்து பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, சபரிமலை பம்பைக்கு இலகுரக வாகனங்களில் வரும் பக்தர்கள் நேரடியாக பம்பை பகுதியில் உள்ள பார்க்கிங் ஏரியா அனைத்திலும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் மண்டல, மகர காலங்களில் நிலக்கல், பம்பாவில் EV வாகனங்களுக்கு (மின்சார கார்கள்) மின்னேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
நாளை சனிக்கிழமை திருவிதாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீ சித்திரை திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
நவம்பர் 6, 2026 மாலை 5:00 மணிக்கு தந்த்ரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் படி நடை திறந்து வைத்தார். நவம்பர் 7, 2026 (நாளை) சனிக்கிழமை அன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்சி பூஜை மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சிறப்பு பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பின், நவம்பர் 7 அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சபரிமலை ஆன்லைன் போர்டல் மூலம் தங்களின் Virtual Queue தரிசன இடங்களை முன்பதிவு செய்து வருவது அவசியமாகும்.
இந்த சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டின் புகழ்பெற்ற மண்டல கால யாத்திரைக்காக நவம்பர் 16, 2026 அன்று மாலை மீண்டும் கோலாகலமாக நடை திறக்கப்பட உள்ளது.
வரும் மண்டல, மகர காலங்களில் நிலக்கல், பம்பாவில் EV வாகனங்களுக்கு (மின்சார கார்கள்)மின்னேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. 30 நிமிடங்களில் 4 வாகனங்களுக்கு ஒரே நேரத்தில் அதிவேக மின்னேற்ற வசதி செய்யப்பட உள்ளது.
பத்தினம்த்திட்டா ஆட்சியர் நிஜாமுதீன், இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ், ராணி சட்டமன்ற MLA பழகுளம் மது & மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சபரிமலை பம்பைக்கு இலகுரக வாகனங்களில் வரும் பக்தர்கள் நேரடியாக பம்பை பகுதியில் உள்ள பார்க்கிங் ஏரியா அனைத்திலும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது இது நான்காண்டுகளுக்கு பிறகு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கேரளாவில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிக அளவில் வருகிறது சித்திரை அட்டத் திருநாள் சபரிமலை பூஜை வழிபாடுகளை காண பம்பை வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பம்பை நதியில் நீராடி சபரிமலை நடைபாதையில் நடைபெற்ற மேற்கொண்டனர். மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.



