
- SRV Balaji, Thiruvannamalai
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் ,பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர்கள் கோயில் தங்க கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து இன்று முதல் காலை இரவு மாட வீதியில் பஞ்சமூர்த்திகள் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும்.
21ம் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 6.00 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், திருக்கோயில் தக்கார் மீனாட்சி சுந்தரம், முன்னாள் துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருக்கோயில் இணை ஆணையர் பரணிதரன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், தவெக மாவட்ட செயலாளர் பாரதிதாசன், அரசு வழக்கறிஞர் குமரன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Posts by Dhinasari Reporter:
- நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!
- பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்?
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!



