எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!

இந்தியா கல்வி சற்றுமுன்

IMG 20180320 WA0005 - 2026

விடைத்தாளில் ரூபாய் நோட்டுகள் வைத்து, ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்து மார்க் போடுமாறு கெஞ்சலில் ஈடுபட்டுள்ளனர் சிலர்.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது. ஃபெரோசாபாத் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு முடிந்தவுடன் அந்த விடைத்தாளை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்கும் போது அதற்குள் 50,100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் இருந்துள்ளதைக் கவனித்துள்ளார்.  தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வைத்துள்ளதாகத் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியபோது, மாணவர்கள் ரூபாய் நோட்டுகளை விடைத்தாளில் இணைத்து ஆசிரியர்களுக்கான லஞ்சமாக வைக்கின்றனர்.  ஆனால் இதையெல்லாம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் எவரும் மதிப்பெண்கள் வழங்குவதில்லை. விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.

ஆனாலும், விடைத்தாளில் பணம் இணைத்து கெஞ்சுவதும் அங்கே அதிகரிக்கத்தான் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.