marriage 1 2 - 2026

மணமேடையில் அதிர்ச்சி சம்பவம்.. மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மணமகன்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
marriage 1 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. இவற்றை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சிரிப்பதுண்டு.

அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் நடப்பதை பார்த்து மணமகள் மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

இந்த வீடியோவில், மணமகன், மாலை மாற்றும் சடங்கின்போது, மணமகளுக்கு பதிலாக அவரது தங்கைக்கு மாலை அணிவித்து விடுகிறார்.

மணமகளை சீண்டிப்பார்த்த மணமகன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணம் ஒன்று நடப்பதை காண முடிகின்றது.

மாலை மாற்றும் சடங்குக்கு மணமகனும் மணமகளும் தயராக உள்ளனர். அருகில் மணமக்களின் அனைத்து உறவினர்களும் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது.

முதலில் மணமகள் தனது மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் மணமகனின் முறை வருகிறது. மணமகன் தனது மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது ஒரு விளையாட்டை விளையாடுகிறார்.

மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, அவரது தங்கைக்கு மாலை அணிவித்து விடுகிறார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார்.

அதிர்ச்சியடைந்த மணமகள்
மாலை மாற்றும் சடங்கின்போது மணமகன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து மணமகள் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தார். திருமணம் தொடர்பான இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்த வீடியோ Prince_verma569 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, வீடியோவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை எள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.