பிறந்தநாளில் சச்சினை கிண்டலடித்த ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு ரசிகர்கள் பதிலடி!

சற்றுமுன் விளையாட்டு
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 46-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட் கேட்ச், புகைப்படம் என தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளம்மிங்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் டேமியன் பிளம்மிங்-க்கு தெரிவித்துள்ள வாழ்த்துப்பதிவு டெண்டுல்கர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
டேமியன் பிளம்மிங் பந்துவீச்சில் டெண்டுல்கர் போல்ட் ஆகும் பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேமியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆஸி கிரிக்கெட் வாரியத்தின் இந்த விஷம பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆஸி. கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட வீடியோவுக்கு கீழே ஆஸ்திரேலிய அணியை சச்சின் புரட்டியெடுத்த பல இன்னிங்ஸ்களின் வீடியோவை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் தங்களது பதிலை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.